Saturday, 1 December 2018

கத்தார் உட்பட அரபு நாடுகளில் குளிர் காலம் ஆரம்பம் - எந்த மாதிரியான ஆடைகளை அணியலாம்!

கத்தார் உட்பட அரபு நாடுகளில் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை குளிர் காலமாக இருப்பது அறிந்ததே. என்னனனன தான் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் குளிர் காலம் இருந்தாலும், அரபு நாடுகளில் நிலவும் குளிரின் கொரூரம் அங்கு பணி புரிவர்களுக்குத் தான் தெரியும். இந்த குளிரின் தாக்கத்திலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள எது போன்ற ஆடைகளை அணிய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்பபோம். 

குளிர் காலம் என்றால் குழந்தைகள் முதல் அனைவரும் கதகதப்பான ஆடை அணிய பிரியபாடுவார்கள். நாட்டில் வெப்பநிலைகள் பல்வேறு விதமாக இருக்கும் நிலையில், குளிர் காலம் தொடங்கி பனிமூட்டமும், குளிர் காற்றும் வீசி வருகிறது. குளுகுளு காலத்துக்கு எப்படி பட்ட ஆடைகள் அணிய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

கோட்

குளிர் கால ஆடைகளில் மிக முக்கியமாக தேவைப்படுவது கோட் ஆகும். கடுமையான குளிரடிக்கும் நாட்களில் உங்களை கதகதப்பாகவும், உடம்பில் குளிர் காற்று படாதவாறும் வைக்கின்ற அளவுக்கு கனமான கோட்டை பயன்படுத்தவும். குளிர்காலக் கோட்டுகளில் பெரும்பாலானவை நீர் புகாதவை அல்லது நீர் படாதவையாக இருக்கும். உங்களை ஈரம் படாமல் உலர்வாக வைத்துக்கொள்வது கதகதப்பாக இருக்க சிறந்த வழிகளில் இதுவும் ஒன்றாகும்.

தொப்பி

குளிர் பருவங்களில் உடலின் பெரும்பகுதி வெப்பத்தை தலையின் வழியாகவே இழக்கிறோம். கதகதப்பான தொப்பி அணிவது இந்த வெப்ப இழப்பைத் தடுக்கிறது. கதகதப்பான குளிர்காலத் தொப்பிகள் கம்பளி, ஆட்டு ரோமம் அல்லது செயற்கை இழைகள் போன்றவற்றால் தயாரிக்கப்படுகிறது. இது தலையையும் காதுகளையும் மூடுகிறது. கனடா நாட்டில் பிரபலமான 'டோவுக்'/'டியூக்' (toque) என்னும் குளிர்காலத் தொப்பியை அணிந்துக் கொள்ளலாம்.

ஹெட்பேண்ட்
காதுகளை மூடுவதற்கு தலைப்பட்டை (headband) அல்லது காதுமூடிகளை (earmuffs) அணியலாம். காதுகளை கண்டிப்பாக மூடிப் பாதுகாக்க வேண்டும், குறிப்பாக குளிர்காற்று வீசும்போது இவ்வாறு செய்ய வேண்டும், ஏனென்றால் காதுகளில் பனிக்கடி (frostbite) ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இதனால் சளி, இருமல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படக் கூடும்.

கையுறைகள் அல்லது மிட்டன்கள்
கைகளும், விரல்களும் விரைவில் குளிர்ச்சி பெறக்கூடியவை. மிட்டன்கள் (Mittens - பெருவிரலைத் தனியாகவும், மற்ற விரல்களை ஒன்றாகவும் மூடக்கூடிய கையுறை) அல்லது கையுறைகள் (gloves -தனித்தனி விரல்களை செருகக்கூடியவை) உங்கள் கைகளை கதகதப்பாக வைக்க உதவும். விரல்கள் ஒன்றுடன் ஒன்று படுவதால் வெப்பம் தரும் என்பதால் கையுறைகளைவிட மிட்டன்கள் அதிக கதகதப்புத் தரக்கூடியவை. கதகதப்பும் பாதுகாப்பும் தரும் என்பதால் குழந்தைகள் வெளியே விளையாடும்போது மிட்டன்களை அணிந்திருப்பார்கள்.

சாக்ஸ், பூட்ஸ்
சாக்ஸ் அல்லது பூட்ஸ் பாதங்களை கதகதப்பாகவும் உலர்வாகவும் வைக்கின்றன. இதில் லோ-கட் காலணிகள் என்பவை கணுக்கால் வரை மூடக்கூடியவை. ஹை-கட் காலணிகள் என்பவை முழங்கால் வரை மூடுபவை. சில மூடுகாலணிகள் நீர் புகாதவை அல்லது நீரை ஏற்காதவை. மிருதுவான கம்பளியால் ஆன கால் உரைகளையும் உபயோகிக்கலாம். (Thanks to Tamil Samayam)

Author: verified_user

0 comments: