Monday, 3 December 2018

35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்

சவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த  இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவுதி அரேபியாவில் பதிவாகியுள்ளது. மேற்படி இந்திய  நாட்டவர் 1980 களின் ஆரம்பப பகுதியில் சவுதி அரேபியாவின் Hail பகுதியில் வீட்டு உதவியாளராக பணிக்கு வந்து சேர்ந்துள்ளார். 

தற்போது நாடு திரும்புகின்ற நிலையில் அவர் பணி புரிந்த வீட்டி உரிமையாளர் உட்பட அனைத்து அங்கத்தவர்களும் ஒன்றிணைந்து அவரை வழியனுப்பி வைத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். அத்துடன் தாயகம் திரும்பு அவருக்கு பெருந்தொகையான பணமும் வங்கி வைக்கப்பட்டுள்ளதோடு, எதிர் காலத்திலும் அவருக்கு பணம் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அல் அரபியா செய்தி வெளியிட்டுள்ளது. 

Author: verified_user

0 comments: