Monday, 3 December 2018

ஒபெக் கூட்டமைப்பிலிருந்து 2019 ஜனவரி முதல் வெளியேறுகின்றோம் - கத்தார் அதிரடி அறிவிப்பு!

2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு (ஒபெக்) OPEC - Organization of the Petroleum Exporting Countries (OPEC) இருந்து கத்தார் வெளியேறுவதாக இன்று கத்தார் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கத்தார் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் HE Saad bin Sherida al-Kaabi, அவர் வெளியிட்டுள்ளார்கள். 

எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் அமைப்பான ஒபெக்கின் குறைந்த அளவு மசகு எண்ணெகளை ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கின்ற அதேவேளை, திரவ எரிவாயுவை அதிகளவு ஏற்றுமதி செய்யும் நாடாக கத்தார் விளங்குகின்றது. இனிவரும் காலங்களில் கேஸ் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகளில் கூடிய கவனம் செலுத்த இருப்பதனால் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

1960ம் ஆண்டு பெற்றோல் உற்பத்தி செய்யும் ஈரான், ஈராக், குவைத், சவுதி, மற்றும் வெனிசுலா போன்ற 5 நாடுகள் இணைந்து உருவாக்கிக் கொண்ட அமைப்பு தான் ஒபெக். இதன் பின்னர் எண்ணெய் உற்பத்திகளில் ஈடுபடும் பல நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக இணைந்து கொண்டன. கத்தார் 1961ம் ஆண்டு ஒபெக்கில் இணைந்து கொண்டது.

தற்போது ஒபெக் அமைப்பில் 15 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. 
  1. ஈரான்
  2. ஈராக்
  3. குவைத்
  4. சுவுதி
  5. வெனிசுலா 
  6. கத்தார்
  7. இந்துனோசியா
  8. லிபியா
  9. அமீரகம்
  10. நைஜீரியா
  11. அல்ஜீரியா
  12. ஈகுவாடோர்
  13. அங்கோலா
  14. Equatorial Guinea 
  15. கொங்கோ
ஒபெக்கின்ற தலைமையகம் அவுஸ்திரேலியா நகரின் வியன்னா நகரில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: