Wednesday, 7 November 2018

இந்தியர்களுக்கான ON ARRIVAL VISA சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்தது கத்தார்!

எதிர்வரும் நவம்பர் மாதம் 11ம் திகதி முதல் கத்தாருக்கு ON ARRIVAL VISA இந்தியர்கள் 30 நாட்களுக்கு மேல் நீடிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்ட மாட்டாது என்பதாக கத்தார் உள்துறை அமைச்சு அறிவித்ததுள்ளது.

 கடந்த வருடம் கத்தாருக்கு வருவோருக்கான ON ARRIVAL VISA வழங்கும் நடைமுறை கத்தார் அறிமுகம் செய்தது. இதில் உள்ளடங்கும் 80 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியர்கள் கத்தாருக்கு வீசா இன்றி வந்து கத்தார் விமான நிலையத்தில் வைத்து ON ARRIVAL VISA வைப் பெற்றுக் கொண்டு கத்தாரில் 30 நாட்கள் தங்க முடியும் என்பதோடு தேவைப்பட்டாரல் இன்னும் 30 நாட்களுக்கு (மொத்தம் 60 நாட்கள்) வீசாவை நீடித்துக் கொள்ள முடியும் என்ற சலுகையும் வழங்கப்பட்டு இருந்தது.

அந்த சலுவை தற்போது நிறுத்தப்பட்டு 30 நாட்கள் மட்டுமே தங்க முடியும் என்பதாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது கத்தாருக்கு ON ARRIVAL VISAவில் பயணி்க்க எத்தனிக்கும் இந்தியர்கள் தங்களது பெயரில் உள்ள கடனட்டையை (Credit Card) கொண்டிருக்க வேண்டும் என்பதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர்த்து கத்தாரில் காலடி எடுத்து வைக்கும் தினத்திலிருந்து 6 மாதத்துக்கான கடவுச்சீட்டின் செல்லுபடி, மீள தாயகம் திரும்புவதற்கான விமான டிக்கட்டின் புக்கிங் செய்யப்பட்ட பிரதி, அத்துடன் கத்தாரில் தங்குவதற்கு புக்கிங் செய்யப்பட்ட ஹோட்டலின் உறுதிப்படுத்தல் பிரதி போன்றவற்றையும் வைத்திருக்க வேண்டும். 

கத்தாரக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வரும் 6 நாடுகளில் ஒன்றாக இந்தியா காணப்படுவதாக கத்தார் உள்துறை அமைச்சின் ஏப்ரல் மாத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: