Sunday, 11 November 2018

கத்தாரில் மழையுடன் கூடிய காலநிலை! வாகன ஓட்டுநர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

கத்தாரில் தற்போது நிலவும் மழையுடுன் கூடிய காலநிலையை முன்னிட்டு கத்தார் உள்துறை அமைச்சு வாகன ஓட்டுநர்களுக்கான விஷேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அவை வருமாறு....

1. பாதைகளும் உங்களுக்கு முன்னால் தோன்றும் நீர்குட்டைகளில் உங்களது வாகனங்களை செலுத்த வேண்டாம்

2. வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த தடையை(Break) படிப்படியாக பயன்படுத்துங்கள்

3. வேகத்தக் குறைத்து, ஏனைய வாகனங்களை முந்திச் செல்வதை தவிர்த்துக் கொள்வதோடு, ஹஸாட் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டாம்.

4. வாகனம் செலுத்தும் போது மொபைல் போன் பாவிப்பதை முற்று முழுதாக தவிருங்கள்

5. சாதாரண சூழ்நிலைகளில் உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனங்களுக்கு விடும் இடைவெளியை விட அதிகளவு இடைவெளியில் வாகனத்தை செலுத்துங்கள்




Author: verified_user

0 comments: