Friday, 30 November 2018

2019ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கான பெற்றோல் விலையை அதிரடியாக குறைத்த கத்தார் அரசு!

2019lம் ஆண்டு ஜனவரி  மாதத்துக்கான விலைகளை இன்று நாள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைத்துள்ளதாக கத்தார் எரிசக்தி மற்றும் தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. 

அந்த வகையில் நவம்பர் மாதம், 1.80 றியால்களாக விற்கப்பட்டு வந்த 91-octane பெற்றோல் (Premium) 30 திர்ஹங்கள் குறைக்கப்பட்டு 1.50 றியால்களாகவும், 1.85 றியால்களாக விற்கப்பட்டு 95-octane பெற்றோல் (Super) 30  திர்ஹங்கள் குறைக்கப்பட்டு 1.55 றியால்களாகவும், அதே போன்று 2.00 றியால்களாக விற்கப்பட்டு வந்த டீசல் 55 திர்ஹங்கள் குறைக்கப்பட்டுள்ள 1.75 றியால்களாகவும் விற்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி அறிவித்தலை கத்தார் எரிசக்தி மற்றும் தொழில் அமைச்சு உத்தியோக பூர்வ இணையத்திலும், சமூக வளைதளங்கள் மூலமாகவும் அறிவித்துள்ளது.



Author: verified_user

0 comments: