Thursday, 8 November 2018

உங்களின் கருணையை நாடி நிற்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அநாதைகள் சகோதரிகள்!

படத்திலுள்ள இரு சகோதரிகளும் கிண்ணியா, காக்காமுனையைச் சேர்ந்த கவணிப்பாரற்ற அநாதைகள். (படம் கீழே)

தற்போது வயது சென்ற தந்தையின் தாயின் பராமரிப்பில் எதுவித வருமானமுமின்றி வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர். அரைகுறையாக முடிக்கப்பட்ட வீடு, வருமானமின்மை மற்றும் சமூக பாதுகாப்பின்மை இவர்களின் தீர்க்கப்படாத குறைகள்.

இவர்களின் வீட்டை பூரணப்படுத்த, வயிற்றுப்பிழப்புக்கான ஒரு தொழில் (வீட்டுடன்) உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றார்கள்.

மூத்தவர் (வயது 26 ) தாதி உதவியாளர் NVQ 3 பயிற்சி முடித்தவர், இளையவர் (வயது 20 ) தையல் பயிற்சி முடித்தவர்.

இவர்களின் வாழ்க்கையை ஸ்திரப்படுத்தி துயர்போக்க எவராவது முன்வரலாம். நேடில் சென்று நிலைமையை அறியலாம்.. விரும்பின்....

இதுபற்றிய உண்மைத்தன்மை, தகவல் அறிய:
சகோதரர். பரூஸ் சலாம்- 0778867131
சகோதரர். தெளஜீத்-0776461578.






Author: verified_user

0 comments: