Thursday, 8 November 2018

சவூதி அரேபியாவின் முதலாவது, அணு உலைத் திட்டம் ஆரம்­பம்!

சவூதி அரே­பி­யாவின் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ர­ச­ரினால் அந் நாட்டின் முத­லா­வது அணு ஆராய்ச்சி உலைத் திட்டம் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­ட­தாக சவூதி அரே­பிய ஊடக முக­வ­ரகம் தெரி­வித்­துள்­ளது. 

எம்.பீ.எஸ். என அறி­யப்­படும் சவூதி அரே­பி­யாவின் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்­மா­னினால் புதுப்­பிக்­கத்­தக்க எரி­சக்தி, அணு சக்தி, நீர் சுத்­தி­க­ரிப்பு, பாரம்­ப­ரிய மருத்­துவம் மற்றும் விமான உற்­பத்திக் கைத்­தொழில் போன்ற ஏழு முக்­கிய திட்­டங்கள் விஞ்­ஞான மற்றும் தொழில்­நுட்­பத்­திற்­கான மன்னர் அப்துல் அஸீஸ் நக­ரத்­திற்கு கடந்த திங்­கட்­கி­ழமை மேற்­கொண்ட விஜ­யத்­தின்­போது ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டன. 

ஆரம்­பித்து வைக்­கப்­பட்ட திட்­டங்­களுள் அணு ஆராய்ச்சி உலைத் திட்­டமும் விமான கட்­ட­மைப்பு அபி­வி­ருத்­திக்­கான மத்­திய நிலை­யமும் மிக முக்­கி­ய­மான திட்­டங்­க­ளாகும். 

ஈரான் தனது கொள்­கையில் தொடர்ந்து பய­ணிக்­கு­மானால் அணு­வா­யு­தங்­களை உற்­பத்தி செய்­வ­தற்கு தனது நாடும் தயா­ராக இருப்­ப­தாக கடந்த மார்ச் மாதம் சவூதி அரே­பி­யாவின் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்மான் தெரி­வித்­தி­ருந்தார். 

அணு­வா­யு­தங்­களை வைத்­தி­ருக்க வேண்­டிய தேவை சவூதி அரே­பி­யா­வுக்கு இல்லை எனினும், ஈரான் அணு­வா­யு­தங்­களை உற்­பத்தி செய்தால் நாமும் அதற்­கேற்ற நட­வ­டிக்­கை­களை மிக விரைவில் மேற்­கொள்வோம் என நேர்­காணல் ஒன்­றின்­போது இள­வ­ரசர் மொஹமட் பின் சல்­மான் தெரி­வித்­தி­ருந்தார். 

2015 ஆம் ஆண்டு ஈரா­னுடன் செய்து கொண்ட முக்­கி­யத்­து­வம் ­வாய்ந்த உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து வில­கிக்­கொண்ட அமெ­ரிக்கா கடந்த திங்­கட்­கி­ழமை தொடக்கம் ஈரா­னுக்கு எதி­ரான எண்ணெய் மற்றும் பொரு­ளா­தாரத் தடை­களை மீள விதித்­தது. 

சவூதி அரே­பிய அர­சாங்கம் தனது சக்தி தேவை­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக இரண்டு அணு உலை­களை நிர்­மா­ணிப்­ப­தற்­கான முன்­மொ­ழி­வு­களைக் கடந்த வருடம் கோரி­யி­ருந்­த­தாக சர்­வ­தேச அணு­சக்தி முக­வ­ரகம் தெரி­வித்­துள்­ளது. 

சவூதி அரே­பிய அர­சாங்கம் 2032 ஆம் ஆண்­ட­ளவில் 17.6 ஜிகாவோட்ஸ் அணு­சக்தி கொள்­ள­ள­வினை கொண்­டி­ருக்க எதிர்­பார்த்­துள்­ளது. இந்த அளவு சுமார் 17 அணு உலை­க­ளுக்கு சம­மா­ன­தாகும். அது உல­கி­லேயே மிகப் பெரும் திட்­ட­மாக அமையும். 

உள்­நாட்­டுக்குத் தேவை­யான மின்­சா­ரத்தை உற்­பத்தி செய்­வ­தற்குப் பயன்­ப­டுத்­தப்­படும் மசகு எண்­ணெயின் அள­வினைக் குறைத்து அவற்றுள் பெரும்­பா­லா­ன­வற்றை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பனை செய்­வ­தற்கு சவூதி அரே­பிய அரசு திட்­ட­மிட்­டுள்­ள­தாக சர்­வ­தேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுமானால் அணுசக்தித் திட்டத்தை ஆரம்பித்த இரண்டாவது வளைகுடா நாடாக சவூதி அரேபியா மாறும். 

தென்கொரியாவின் வடிவமைப்பில் உருவான நான்கு அணு உலைகளை ஏலவே ஐக்கிய அரபு அமீரகம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: