Thursday, 8 November 2018

நிதி பிரச்சனைகளால் சவுதி சிறையிலுள்ளவர்களின் கடன் தள்ளுபடி செய்து பொது மன்னிப்பு: மன்னர் அறிவிப்பு!

நிதி பிரச்சனைகளால் சிறையில் இருப்பவர்களின் கடன்களை தள்ளுபடி செய்து பொது மன்னிப்பும் வழங்கினார் சவுதி மன்னர்

சவுதி அரேபியாவின் ஹாயில் நகருக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள சவுதி மன்னர் பல்வேறு நிதி சம்பந்தப்பட்ட வழக்குகளால் சிறை தண்டனை அனுபவித்து வரும் சவுதி சிறைவாசிகளின் 1 மில்லியனுக்கு உட்பட்ட கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ததுடன் அவர்களின் விடுதலைக்கும் உத்தரவிட்டார் ஆனால் இந்தப் பலன்களை அடைய சம்பந்தப்பட்ட சிறைவாசிகளின் மீது எத்தகைய கிரிமினல் குற்றங்களும் இருக்கக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள் தங்களின் கடனை அடைக்க முடியவில்லை என்பதை நிரூபித்தால் அவர்களின் கடன்களையும் அரசே ஏற்றுக் கொள்ளும் எனவும் அறிவித்தார்.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: