Monday, 12 November 2018

மகிழ்ச்சியான செய்தி! - ஒமனில் 5 நாட்களுக்கு தொடர் பொது விடுமுறை அறிவிப்பு!

ஓமனில் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு 5 நாட்களுக்கு தொடர் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீலாதுந்நபி மற்றும் ஓமனின் 48 வது தேசிய தினம் கொண்டாடப்படுவதையொட்டி இத்தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 20 ஆம் தேதி துவங்கி 24 ஆம் தேதி வரை தொடர் பொது விடுமுறையாகும். நவம்பர் 25 ஆம் தேதி வழமைபோல் பணிகள் நடைபெறும் எனவும் மனிதவளத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: