Monday, 22 October 2018

குவைத்தில் அரசுத்துறை வேலைகளில் உள்நாட்டவர்களை மட்டும் நிரப்ப முடிவு!

குவைத்தில் அரசுத்துறை வேலைகள் விரைவில் 100% குவைத்தியர்களால் நிரப்பப்படும் என்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குவைத் அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளபடி, விரைவில் குவைத் அரசுத்துறை வேலைகள் அனைத்தும் 100% குவைத்தியர்களால் நிரப்பப்படும் என அறிவித்துள்ளது.

அரசுத்துறைகளில் பணியாற்றி வரும் வெளிநாட்டவர்கள் படிப்படியாக நீக்கப்பட்டு அந்த இடங்களில் குவைத்தியர்களை நியமிக்கும் பணிகள் ஏற்கனவே துவங்கி மிகவேகமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் குவைத் நாடாளுமன்ற உறுப்பினர் முஹமது அல் தல்லால் சமீபகாலங்களில் குவைத்தில் எகிப்தியர்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டியதை அடுத்து அது குறித்தும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: