Sunday, 21 October 2018

ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி படுகொலையில், சவுதி அரேபியா சிக்கியது எப்படி...?

நாங்கள் Artificial Intelligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அவரது சகல தகவல்களும் பதிவாகின்றது. அண்மையில் கொழும்பில் Google நிறுவனத்தின் ஆசிய பிராந்திய முகாமையாளர் ஒருவரிடம் நேரடியாகவே கேட்டேன். அவர் அதனை மறுக்கவில்லை நாங்கள் அழித்த தகவல்ளை அவர்களிற்கு மீள வழங்க முடியும் என்று தெளிவாகக் கூறினார். ஒருவர் எங்கு சென்றார், என்ன வேலை செய்தார், சில நேரம் video வுடன் பதிவாகும். எனவே இந்த யுகத்தில் வாழ்வதும், செயலாற்றுவதும் இலகுவானதல்ல .

Jamal Khashoggi கொலை செய்யப்படும் போது அவரது Apple கடிகாரத்தை இயங்கச் செய்துள்ளதாகவும், அது cloud இலும் அவரது சோடி தொலைபேசியிலும் பதிவாகியுள்ளதாக துருக்கிய பத்திரிகை செய்தி வெளியீட்டுள்ளது. அவர் ஒரு சாதாரண ஊடகவியலாளர் அல்ல பயங்கர அனுபவமுடைய ஊடகவியலாளர், அவர் அவ்வாறு செய்திருப்பதற்கான நிறைய வாய்ப்பு உள்ளது. இந்த செய்தி உறுதியானால் சவுதியின் மன்னராட்சியின் முடிவு ஆரம்பமாகும்.

சக்தி வாய்ந்த துருக்கிய உளவுப் பிரிவு அனேகமாக எல்லா காட்சிகளையும் பதிவு செய்திருக்கும் என CIA உற்பட பல உளவு நிறுவனங்கள் சந்தேகப்படுகின்றன. துருக்கியிடம் எல்லா தகவல்களும் உள்ளன ஆனால் பிற நாட்டு தூதுவர் ஆலயத்தில் நடப்பவற்றை உளவு பார்ப்பது சர்வதேச சட்டத்திற்கு முரணானது. எனவே தகவல்களை எப்படி வெளியிடுவது என்பதே துருக்கிற்கு உள்ள மிகப் பெரிய பிரச்சினை.

அனேகமாக சவுதி துருக்கியுடன் பேரம் பேசும், அது சவுதியில் மட்டுமன்றி எகிப்திலும் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வது வரை நீண்டு செல்லலாம். Big data சவுதியை Big Problem இல் சிக்க வைத்துள்ளது.

டிரம்ப் சவுதியை கடுமையாக தண்டிப்பதாக எச்சரித்துள்ளார். Jamal Khashoggi எதற்காகப் போராடினாரோ அவரது மரணம் அல்லது கடத்தல் அதனை சர்வதேச பேசுபொருளாக மாற்றியுள்ளது. பல சலபி, இஹ்வானிய அறிஞர்களை சவுதி ஆட்சியாளர்கள் சிறையில் அடைத்துள்ள நிலையில் Jamal Khashoggi கொலை செய்யப்பட்டிருந்தால் சவுதி ஆட்சியாளர்களுக்கு ஆட்சியாளர்களுக்கு சர்வதேச நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பிக்கலாம்.

M.N.Mohamed

Author: verified_user

0 comments: