Saturday, 20 October 2018

கத்தார் உள்ளூர் உற்பத்திகளுக்கான சிறப்பு குளிர்கால சந்தை ஷமால் பகுதியில் திறப்பு!

கத்தாரில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிப் பொருட்களைப் விற்பனை செய்வதற்கான குளிர்கால சிறப்புச் சந்தைகளை கத்தார் நகராட்சி மற்றும் சுற்றுப் புறச் சூழல் அமைச்சு ஏற்படுத்தி கொடுப்பது வழமையாகும். அந்த வகையில் 2018ம் ஆண்டு குளிர்கால சிறப்புச் சந்தை எதிர்வரும் வியாழக்கிழமை (25.10.2018) அன்று ஷமால் பகுதியில் திறக்கப்பட இருக்கின்றது. 

உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்க இதுபோன்ற விஷேட வசதிகளை கத்தார் அரசு மேற்கொள்கின்றது. உள்ளூர் உற்பத்திகள் நியாயமான விலையில் இங்கு பெற்றுக் கொள்ள முடியும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜுன் மாதம் கத்தார் - சவூதிக் கூட்டணி நாடுகளுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து கத்தார் உள்ளூர் உற்பத்திகளில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: