Friday, 19 October 2018

கத்தாரில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை திங்கள் வரை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்

கத்தாரில் தற்போது நிலவி வரும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் திங்கட் கிழமை (22.10.2018) வரை தொடரும் என கத்தார் வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக கத்தாரின் டோஹா மற்றும், ஏனைய நகரங்களில் மழையுடன் கூடிய காலநிலை பதிவாகி இருந்தது. 

இந்த காலநிலை எதிர்வரும் திங்கட் கிழமை வரை தொடரும் என்பதாக கத்தார் வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. பொதுவாக பருவகால மாற்றங்களின் போது மழை பெய்வது வழமையாகும். கடந்த சில மாதங்களாக கடும் வெய்யிலுடன் கூடிய காலநிலை காணப்பட்டது. எதிர்வரும் மாதங்களில் கத்தாரில் குளிர் காலம் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மழையுடன் கூடிய காலநிலையில் எடுக்கப்பட்ட சில படங்கள் உங்கள் பார்வைக்கு....









Author: verified_user

0 comments: