Tuesday, 16 October 2018

ஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்! உள்துறை அமைச்சு

எதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்துறை அமைச்சு இன்று (16.10.2018) அறிவித்துள்ளது. கத்தாரில் வேலைவாய்ப்பு வீசாவில் பணிபுரிபவர்கள் கத்தாரை விட்டு வெளியேற தொழில் வழங்குனர்களின் இறுதி அனுமதியே EXIT PERMIT என அழைக்கப்படுகின்றது. இது தொழிலாளர்களின் உரிமை பறிப்பு என பல்வேறு தரப்பாலும் குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் இந்த EXIT PERMIT நடைமுறை நீக்குவதாக  கத்தார் அறிவித்தது. 

பின்னர் நிதி தொடர்பான பதவிகளில் பணிபுரியும் 5 வீதமான தொழிலாளர்களுக்கு தொடர்ந்து EXIT PERMIT முறைமை பேணப்படும் என்பதாக அறிவிக்கப்பட்டு, அந்த 5 வீதமானர்கள் யார் என்பதை நிறுவனங்கள் தீர்மானித்து பெயர் விபரங்களை உள்துறை அமைச்சில் பதிவு செய்யுமாறு வேண்டப்பட்டு இருந்தது. தற்போது அனைத்து விதமான அலுவலக வேலைப்பாடுகளும் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் 28ம் திகதி முதல் EXIT PERMIT இன்றி தொழிலாளர்கள் தாயகங்களுக்கு பயணிக்க முடியும் என்பதாக உள்துறை அமைச்சில் இன்று வெளியிடப்பட்ட விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Author: verified_user

0 comments: