Thursday, 20 September 2018

eSIM ஐ அறிமுகப்படுத்துகின்றது கத்தார் வொடபோன் நிறுவனம்!

கத்தாரி்ல் முதன் முறையாக eSIM (Embedded SIM) தொழில்நுட்பத்தை கத்தார் வொடபோன் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. செம்டம்பர் மாதம் 28ம் திகதி இந்த eSIM அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கடந்த 12ம் திகதி ஆப்பில் நிறுவனத்தில் வெளியிடப்பட்ட புதிய ஐபோன்களில் இரண்டு சிம்கள் கொண்டதாக அமையும் என்பதாக அறிவிக்கப்பட்டது. 

அந்த இரண்டு சிம்களில் ஒன்று eSIM என்பதாகும். புதிய iPhone Xs and iPhone Xs Max போன்றவைகளைப் பயன்படுத்த வேண்டுமாயின் நாம் eSIM பயன்படுத்தியே ஆக வேண்டும். ஆகவே ஐபோன் பாவனையாளர்களுக்கு சிறந்த சேவை உடனடியாக வழங்குவதற்காக இந்த eSIM தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுத்த இருப்பதாக கத்தார் வொடபோன் தரப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Author: verified_user

0 comments: