![]() |
அடையாளப்படம் |
மத்திய தரைக்கடல் பகுதியில் மாயமானதாக அறிவிக்கப்பட்ட ரஷ்ய ராணுவ விமானத்தை சிரியா தவறுதலாக சுட்டுவீழ்த்தியிருப்பது தெரியவந்திருக்கிறது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அரசு படைகளுக்கு ரஷ்யா ஆதரவு அளிப்பதோடு, விமான தாக்குதலும் நடத்தி வருகிறது.
இதற்கு மத்தியில், ஏவுகணைகள் மூலம், சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த பதற்றமான சூழலில், சிரியா எல்லையில் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரஷ்ய கடற்படைக்குச் சொந்தமான ரோந்து விமானம் திடீரென மாயமானது.
இஸ்ரேல் வீசிய ஏவுகணை தாக்குதலில் சிக்கி ரஷ்ய விமானம் வீழ்த்தப்பட்டிருக்கலாம் என முதலில் தகவல் வெளியானது.
இதனை இஸ்ரேல் மறுத்த நிலையில் சிரியாவின் விமான எதிர்ப்பு பீரங்கிகள் தவறுதலாக ரஷ்ய கடற்படை ரோந்து விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் அதில் இருந்த 15 பேரும் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: