Tuesday, 11 September 2018

அழுதுகொண்டிருந்ததால் ஆத்திரமடைந்து 6 வயது மகளின் உதட்டை கடித்து எறிந்த தாய் - அதிர்ச்சி சம்பவம்!

ரஷ்யாவில் தினமும் இரவு நேரம் அழுதுகொண்டிருந்த 6 வயது மகளின் உதட்டை, பெற்ற தாயே கடித்து எறிந்துள்ள கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ரஷ்யாவின் Sverdlovsk Oblast மாகாணத்தை சேர்ந்த Ludmila (33) என்பவர் Revda பகுதியில் வசித்து வந்தார். இவருடைய 6 அவரது மகள் Katya Spesivtseva பிறக்கும் பொழுதே மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதனால் தினமும் இரவு நேரத்தில் சிறுமி அழுது கொண்டே இருந்துள்ளார். இதனை பொருட்படுத்த முடியாத Ludmila, கோபமடைந்து மகளின் கீழ் உதட்டை கடித்து எறிந்துள்ளார்.

இதில் வலி தாங்க முடியாமல் சிறுமி தினம் தோறும் அழுதுகொண்டே இருந்தாலும், எந்தவிதமான சிகிச்சையும் அழைக்காமல் Katya சிறுமியை வீட்டிலேயே வைத்திருந்துள்ளார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து Katya கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிறுமியின் வீட்டிற்கு வந்தடைந்தனர்.

அங்கு சிறுமியின் நிலையை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள், உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிசிச்சை அளித்தனர்.

அங்கு மேற்கொண்ட சிகிச்சையில் சிறுமியின் உடல் முழுவதும் காயங்கள் இருப்பதையும், மூக்கையும் Katya கடிக்க முயன்றிருப்பதை கண்டறிந்தனர்.

2016-ம் ஆண்டு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமியை Krasnodar Krai மாகாணத்தை சேர்ந்த Anna என்ற பெண் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார்.

இதற்கிடையில் குழந்தையை கொடுமைப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட Katya-விற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Anna குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த சிறுமி அவருடைய 9-வது வயதில் இதயக்கோளாறு காரணமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து Anna கூறுகையில், Katya எங்களுடன் நீண்ட நாட்கள் இல்லை என்றாலும், அவரை இழந்தது எங்களுக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது என வேதனை தெரிவித்துள்ளார்.



Author: verified_user

0 comments: