Friday, 21 September 2018

கத்தாரில் பொடுபோக்காக சத்திர சிகிச்சை செய்த வைத்தியருக்கு 10 இலட்சம் றியால்கள் அபராதம்!

கத்தாரின் வைத்தியசாலையான்றில் பணி புரியும் சத்திர சிகிச்சை நிபுனருக்கு 10 இலட்சம் றியால்கள் (1M) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கத்தார் பெண்மணி ஒருவருக்கு மேற்கொண்ட சத்திர சிக்கிச்சை ஒன்றின் போது பொடுபோக்காக செயற்பட்டார் என குற்றம் சாட்டப்பட்டு பின்னர், பொது மன்றத்தில் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டு தற்போது 10 இலட்சம் றியால்கள் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தெரியவருவதாவது, 
கத்தார் பெண்மணி ஒருவருக்கு வயிற்றுடன் தொடர்புபட்ட சத்திர சிகிச்சையின் போது துணித்துண்டு ஒன்றை உள்ளே வைத்து தைத்து விட்டார். சிறிது காலத்தின் பின்னர் வயிற்றில் வலி ஏற்பட துணி உள்ளே இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த துணி வெளிநாடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட அவசர சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. இதற்காக மேலதிக பணமும் செலுத்துப்பட்டுள்ளது. 

மேற்படி அனைத்து விபரங்களும் உறுதிப்படுத்தப்பட்டு தற்போது முதலாவதாக சத்திர சிகிச்சை மேற்கொண்ட வைத்தியருக்கு 10 இலட்சம் கத்தார் றியால்களை அப்பெண்மணிக்கு செலுத்துமாறு கத்தார் நிதிமன்றம் தீரப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: