Saturday, 22 September 2018

சவுதியில் சுமார் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பொருள் தடயம் கண்டுபிடிப்பு!

18 பேர் கொண்ட சவுதி மற்றும் பிரான்ஸ் நாட்டின் தொல்பொருள் ஆராய்ச்சிக்கான கூட்டுக்குழுவினர் ஆதி கற்காலம் என அறியப்படும் (சுமார் 20 லட்சம் ஆண்டுகள் முதல் 10,000 ஆண்டுகள் வரை) காலத்தை சேர்ந்த தொல்லியல் தடயங்களை (archaeological site) சவுதியின் தலைநகர் ரியாத்தை சுற்றியுள்ள மலைத்தொடர்களில் குறிப்பாக அல் கர்ஜ் மலை, மவான் பெருவெளியை சுற்றியுள்ள மலைகள், எய்ன் பர்சானி மற்றும் அல் ஷதீதா நகரத்தை நோக்கியுள்ள குன்று ஆகிய இடங்களில் கண்டறிந்துள்ளனர். 

இந்தத் தடயங்கள் சுமார் 1 லட்சம் வருடங்கள் பழமையானவை என விஞ்ஞான சோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக சவுதி தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: