Wednesday, 8 August 2018

கத்தாரின் சந்தைகளிலிருந்து இந்த வாகனங்களை அப்புறப்படுத்த அதிரடி உத்தரவு!

நாலிர் பின் காலித் நிறுவனத்துடன் இணைந்து கத்தார் வா்த்தகத்துறை அமைச்சு Mercedes Benz G-Class, GL-Class and ML-Class போன்ற 2013-2015 ஆண்டு வடிவ வாகனங்களை சந்தைகளிலிருந்து அப்புறப்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. நிறுவன விபரங்குறிப்புகளுக்கு அமையாமல் இயந்தரங்களின் கட்டுப்பாட்டு நிரல்கள் (Coding) வடிவமைக்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம் என்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

வர்த்தகத்துறை அமைச்சின் அறிக்கையின் படி வாகன விற்பனையாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் எந்த விதமான பங்கம் ஏற்படாத வகையில் அமைச்சின் முன்னெடுப்புக்கள் காணப்படும் என்பதோடு ஏற்கனவே கொள்வனவு செய்தவர்களுக்கு, வாகன இயந்திரங்களில் காணப்படும் பிரச்சினைகள் தகுந்த முறையில் நிவர்த்தி செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்பதாகவும் அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Author: verified_user

0 comments: