Sunday, 5 August 2018

துபாயிலிருந்து விமானத்தில் மாறி வந்த சடலம்: அதிர்ச்சியடைந்த பெற்றோர்

கேரளாவில் வயநாட்டை சேர்ந்த நிதின் என்பவர் ஐக்கிய அமீரகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 5-ம் தேதி நிதின் கோட்டார் இறந்து விட்டதாக அவரது பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, இந்திய தூதரகத்தின் உதவியுடன் இறந்துபோன நிதினின் உடலை விமானம் மூலம் கேரளாவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

ஆனால், வீட்டிற்கு வந்து சடலத்தை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் அது நிதினின் சடலம் கிடையாது.

இது ஐக்கிய அமீரகத்தில் கடந்த 7-ம் தேதி உயிரிழந்த தமிழர் காமாட்சி கிருஷ்ணன் என்பது தெரியவந்தது. இதையடுத்து ராமநாதபுரம் எஸ்.பி.க்கு தகவல் அளித்து அந்த உடலை எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வயநாடு நிதினின் உடலை அபுதாபியில் இருந்து கொண்டுவரும் நடவடிக்கையில் கேரள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Author: verified_user

0 comments: