Tuesday, 7 August 2018

கொழும்பில் உள்ள பெரும்பான்மையினரை கவலையில் ஆழ்த்தி ஆப்கானியர்கள் கும்மாளம்

இரவு 03.08.2018 ஆகஸ்ட் நடுநிசியில் ரத்மலானையில் இருந்து ஒரு பெரும்பாண்மையினத்தவாிடமிருந்து ஒர் அவசரத் தொலைபேசி அழைப்பு - எனக்கு வந்தது 

”தயவு செய்து ரத்மலானையில் சென்ரீட்டா வீதிக்கு உள்ள வீடொன்றிக்கு வரவும். இவ் வீட்டில் இரவு 11 -மணியில் இருந்து அரபியா்கள் அவா்களுகுள்ளேயே அவா்களது பாசையில் சத்தம்போட்டுக் கொண்டு பெண்களும் பிள்ளைகளும் கூச்சலிட்டு அலரும் சத்தம் கேட்கிறது. ஒரு பாரிய யுத்தகளமாக இவ்விடம் உள்ளது. அக்கம் பக்கத்தில் வாழும் பெரும்பாண்மைச்சமுகம் துாங்கமுடியாமல் புதினம் பாா்த்துக் கொண்டு இருக்கின்றனா் எனச் சொல்லப்பட்டது. உடன் அவ்விடத்தில் எனது மோட்டாா் பைசிக்களில் விரைந்தேன். 

அவா்கள் அராபியா்கள் அல்ல ஆப்கணிஸ்த்தான் நாட்டவா்கள் அவா்கள் 4 வருடங்களுக்கு முன்னா் அவா்கள் நாட்டில் யுத்தம் நடைபெறும்போது அகதியாக கட்டுநாயக்கவிமான நிலையம் வந்தவா்கள். அவா்களுக்கு இலங்கையில் ஜ.நா. அகதி ஸ்தாபணத்தின் சட்டதிட்டத்திற்கு எற்ப அகதி அந்தஸ்த்தும் வழங்கப்பட்டது. அவா்கள் மாதாந்தம் கொடுப்பணவு வழங்கப்படுகின்றது. கல்கிசையில் சர்வதேச பாடசாலைகளில் சிறுவர்கள் கல்வி கற்கின்றனா். அவா்ள் 3 குடும்பம் 5 சிறிய குழந்தைகள் பெண்கள் மூவா். ஆண்கள் மூவா். இவா்களுக்கு கொழும்பில் உள்ள ஜக்கிய நாடுகள் அகதிகள் அமையம் முஸ்லிம் எயிட் ஊடாக கவணித்து வருகின்றது. 

நேற்று இரவு அந்த ஆப்கணிஸ்தா்ன் இரு வாலிபா்கள் வயது 20,22 மதிக்கதக்க வாலிபா்கள் சாரயம் (மது ) அருந்திவிட்டு தனது சிறிய தந்தையும் அவா்களுடன் இருக்கும் பெண்கள் குழந்தைகளுக்கு அடிக்கும்போது அந்த குழந்தைகள் பெண்கள் அலரும் சத்தம் பொருட்கள் உடையும் போது எழும் சத்தங்கள் அருகில் வாழ்ந்த பெரும்பாண்மையினருக்கு மிகவும் ஆச்சிரியத்தையும் அசௌகரியத்தையும் ஏ்றபடுத்தியது. அவா்களது இரவுத் துாக்கமுக்கும் தடங்களை ஏற்பட்டிருந்தாா்கள். பெரும்பாண்மையினரே 119 எடுத்து பொலிஸ்க்கு அறிவித்தும் இருந்தனா். 

பெரும்பாண்மையினா் என்னைப் பாா்த்துக் கேட்டாா்கள் இவா்கள் நாட்டில் சாராயம் அருந்தினால் கழுத்தினை வெட்டுவாா்களே, எங்களது குடும்பங்களில்தான் சாரயம் அருந்தி எமது ஆண்கள் இவ்வாறு கத்துவாா்கள் ஆனால் இது போன்று, செய்ய மாட்டாா்கள் பெண்களை அடிப்பது குழந்தைகளை களுத்தில்ஏறி நவிப்பது போன்று செய்வதில்லையே என என்னைப் பாா்த்துக் கேட்டனா். அந்த ஆப்கணிஸ்தான் குடும்பத்தலைவரை நான் அனுகி அவரிடம் சம்பவத்தினை கேட்டதற்கு எனது மகன்மாா்கள் இங்கு கொம்பியுட்டா் டிப்ளோமா படிக்கிறாா்கள். அங்குள்ள சக மாணவா்களுடன் சோ்ந்து இப்படிச் சாரயம் அருந்துவதை பழகியிருக்கின்றாா்கள். இதனை யாா் வாங்கி கொடுத்தும் தெரியாது இதனை அருந்திவிட்டுத்தா்ன இவா்கள் என்னையும் எனது மனைவி பிள்ளைகளை தாக்குகின்றாா்கள். இது தான் முதற்தடவை, இவா்கள் இபபடி செய்கின்றாா்கள். ஆப்கணிஸ்தா்ன குடும்பத்தலைவரை குடிகாாரா்கள் தாக்கி அவரது மூக்கிலுலம் உடம்பிலும் இரத்தம் ஓடிக் கொண்டிருந்தது. அவரது மனைவியும் பாதை ஓரம் நின் று கொன்டு எனது குழந்தைகயும் அடிக்கிறாா்கள் சாவடிக்கிறாா்கள் என காப்பாற்றுங்கள் என பாதை ஓரம் கதறி அலறிக் கொண்டிருந்தாா். 

நாங்கள் அவா்கள் இருந்த வீட்டுக்குச் சென்றும் அவா்கள் கதவினை முற்றாக் மூடிக் கொண்டே பெண்களையும் குழந்தைகளையும் அடித்துக் கொண்டு இருந்தாா்கள். கல்கிசைப் பொலிசாா் உடன் வரகை தந்திருந்தாா்கள். அவா்களிடம் கீழ் நின்ற ஆப்கணிஸ்தான் அவா்கள் இங்கு இல்லை எங்கேயோ ஓடிவிட்டாா்கள் எனச் சொன்னாா். அவரே பொலிஸ் வரவழையுங்கள் எனச் சொல்லிவிட்டு பிறகு இவ்வாறு சொன்னானா். 

ஏன் எனக் கேட்டேன் நாங்கள் அகதிகள் இந்த நாட்டில் எங்களுக்கு பாஸ்போட், வாழும் விசா ஒன்று மே இல்லை எங்களை அவா்கள் அரஸ்ட் பண்ணி நீதிமன்றத்தில் பாரப்படுத்தி சிறையில் அடைத்துவிடுவாா்கள். எனச் சொன்னாா். அப்படியென்றால் உங்களது நாட்டில் இவ்வாறு குடிக்க முடியுமா நீ ங்கள் முஸ்லீம்கள் மற்ற சமுகம் உங்களது ஷரியா முறையிலான இஸ்லாமிய சட்டம் பற்றி நல்ல மதிப்பு வைத்துள்ளது. நீங்களே உங்களது நாட்டில் இப்படி குடித்தால் உங்களுக்கு கசையடி அல்லவா அடிப்பாா்கள் உங்கள்பெண்கள் அமைதியாக அபாயா அணிந்து அமைதியாக நீங்கள் செல்வததை இந்தச் வீதியில் உள்ள சிங்கள சமுகம் உங்கள் மீது மதிப்பு மரியாதையும் வைத்திருந்தாா்கள் நீங்கள் செய்யும் செயலால் முழு இஸ்லாமிய சமுகத்தினையும் சந்தேகம் கொண்டு என்னிடம் பல கேள்விகள் கேட்கின்றனா் என அவாிடம் சொன்னேன்.. 

அவா் சகல சிங்கள சமுகத்திடம் போய் மண்னிப்புக் கேட்டாா். அகதி அந்தஸ்த்தில் கிடைக்கும் பணத்தினை இவா்கள் குடித்து கும்மாளவிடுகின்றனா். நமது நாட்டவா்கள் இவ்வாறு அரபு நாடுகளில் வாழ்ந்து கொண்டு இவ்வாறு செய்யமுடியுமா? இவா்கள் தற்பொழுது நன்றாக படிக்கிறாா்கள. ஏற்கனவே இவா்களுடன் இருந்த இரு ஆப்கணிஸ்தான் இனத்தவா் கொழும்பில் தனியாா் கல்விநிலையங்களில் படித்து அமேரிக்கா சென்றதாகவும் சொன்னாா். 

மேலும் இன்று முஸ்லிம் எயிட் இலங்கைப் பிரநிதியிடம்் இவ்விடயத்தினை தெரியப்படுத்தி இக்குடும்பத்திற்கான கவுன்சிலிங் செய்யுமாறு வேண்டிக் கொண்டேன். ஏற்கனவே மியன்மாா் முஸ்லிம்கள் காலி பூசா முகாமில் உள்ளாா்கள் அவா்களை மீள இங்கு எடுக்க முடியாமல் உள்ளது. இவா்கள் இவ்வாறு இந்த நாட்டில் பிரச்சினைகளை ஏற்படுத்தினால் பொலிஸ்்நீதிமன்றம் அவா்களது நாட்டுக்கு புடித்து டிப்போட் பண்ணிவிடுவாா்கள்.(நல்ல காலம் என்னை அழைத்தாா்கள் -சிரச .கிரு. தெரண லங்காதீப ஊடகங்களையும் மற்றும் அந்த பல சேனாக்களையும் அழைக்கவில்லை. அவா்களுக்குச் செய்தி போகியிருந்தால் வேறுவிதமான அசம்பாவிதம் நடந்திருக்கும் ( ஒருவாறு என்னால் கல்கிசை பொலிஸ் அருகில் இருந்த பெருபான்மை மற்றும் சிலரையும் சமாளிக்க முடிந்தது)

(அஷ்ரப் ஏ.சமத்)

Author: verified_user

0 comments: