Sunday, 5 August 2018

வெளிநாட்டில் வாழும் இலங்கையரா நீங்கள்? ஓர் மகிழ்ச்சியான செய்தி

இரட்டை குடியுரிமை பெற முடியாத நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்களுக்கு விசேட விசா அனுமதியை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசா தொடர்பான பிரிவின் தலைமை அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் குடிரிமை பெற்றவர்களுக்கு இரட்டை குடியுரிமையை பெற முடியாது.

இவ்வாறான நாடுகளில் குடியுரிமை பெற்று, இலங்கையின் குடியுரிமையை இழந்துள்ள விசேட திறமைகள் மற்றும் முதலீடுகளை செய்ய கூடிய நிலையில் இருக்கும் இலங்கையர்களிடம் இருந்து நாட்டின் அபிவிருத்திக்கான பங்களிப்பை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த புதிய விசா அனுமதியை வழங்க எண்ணியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த விசா அனுமதியானது நீண்டகாலம் இலங்கையில் தங்கியிருக்கக் கூடிய வகையில் வழங்கப்படும் விசா அனுமதியாகும். இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அடுத்த 3 மாதங்களுக்குள் விசா அனுமதிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

தமது தாய் நாட்டுக்கு வந்து தமது அறிவின் மூலம் நாட்டுக்கு சேவையாற்ற அவசியம் எனக் கூறி, அதற்கான வசதிகளை ஏற்பாடு செய்து தருமாறு திணைக்களத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஆராய்ந்த பின்னர் இந்த விசேட விசா அனுமதியை வழங்க தீர்மானித்ததாகவும், ஆயிரக்கணக்கானவர்கள் விசா அனுமதியை பெற்றுக் கொள்ளலாம் எனவும் ஹெட்டியராச்சி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Author: verified_user

0 comments: