Saturday, 14 July 2018

கத்தாரில் கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெறும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவித்தது FIFA

2022ம் ஆண்டு கத்தாரில் உலக்கப் கிண்ணம் கால்ப்பந்துப் போட்டிகள் நடைபெறும் தினத்தை நேற்று (14-07-2018) பீபாவின் தலைவர் கியான்னி இன்பான்டினோ (Gianni Infantino) உத்தியோக பூர்வமான அறிவித்துள்ளார். அந்த வகையில் 2022ம் ஆண்டு நவம்பர் 21 திகதி ஆரம்பித்து டிசம்பர் 18ம் திகதி வரை நடைபெறும். இந்தத் தகவலை கத்தார் நியூஸ் எஜென்ஸி உறுதிப்படுத்தியுள்ளது. 

உலகக் கிண்ண கால்ப்பந்து போட்டிகளில் 32 அணிகள் மட்டுமே பங்கு பற்றி வருகின்றன. அந்த வகையில் இதுவரை வெளியாகியுள்ள உத்தியோக பூர்வ தகவல்களின் அடிப்படைபயில் கத்தாரிலும் 32 அணிகளே பங்கு பற்றும் என்பதாக தெரிகிறது. என்றாலும் பீபா பங்கு பற்றும் அணிகளின் எண்ணிக்கையை 48 அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. 

கத்தாரில் 48 அணிகள் விளையாட அணுமதிக்கப்படுமா என்பதில் இதுவரை பீபா வாய் திறக்கவில்லை. அணிகளின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிக்கும் பட்சத்தில் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் நடைபெறும் பல்வேறு கிளப் போட்டிகள் பாதிக்கப்படும் என்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்துக்கது.

Author: verified_user

0 comments: