Sunday, 15 July 2018

கத்தாரில் கர்வா டெக்ஸி மூலம் பிரயாணம் செய்பவரா நீங்கள்! அப்படியாயின் மகிழ்ச்சியான செய்தி!

கத்தர் போக்குவரத்து சேவையில் அதிகம் பயன்படுத்தப்படுவது டெக்ஸி சேவையாகும். டெக்ஸி சேவையில் இருக்கும் முதன் சேவை நிறுவனம் தான் கர்வா டெக்ஸி சேவையாகும். கர்வா டெக்ஸிகளைப் பொறுத்த வரை நாம் இருக்கும் இடத்திலிருந்து மொபைல் அப்ளிகேசன் மூலம் புக்கிங் செய்து பிரயாணிக்க முடியும். இதற்காக 4000க்கும் அதிகமான டெக்ஸிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஆன்லைன் வழியாக புக்கிங் செய்யும் போது இதுவரை காலமும் புக்கிங்கள் கட்டமாக 5 றியால்கள் முதல் 8 றியால்கள் வரை அறவிடப்பட்டன.

இன்று முதல் (15.07.2018) புக்கிங் கட்டணங்கள் கிடையாது என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்தோடு Technology Service கட்டணமாக அறவிடப்பட்டு வந்த 1 றியால் கட்டணமும் இன்று முதல் தள்ளுபடி செய்யப்படுகின்றன. அந்த வகையில் கர்வா டெக்ஸி மூலம் பயணிக்கின்ற ஒருவர், தான் பயணிக்கின்ற தூரத்திற்கான கட்டணத்தை மட்டுமே செலுத்தவேண்டும். மேலதிக எந்தவிதமான கட்டணத்தையும் செலுத்த வேண்டி ஏற்படாது என்பதாக கர்வா டெக்ஸி சேவை மத்திய நிலையமான மொவாஸலாத் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. கத்தாரில் டெக்ஸி மூலம் அடிக்கடி பிரயாணம் செய்கின்றவர்களுக்கு இது உண்மையில் மகிழ்ச்சியான செய்தி தான்.

Author: verified_user

0 comments: