Tuesday, 17 July 2018

கத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள செய்தி! மொபைல் போன் பாவிக்காதீர்கள்

கத்தாரில் தற்போது கடும் வெயில் காலம் நிவுகின்ற சூழ்நியைில் “Accident-free Summer” என்ற பிரச்சாரத்தை கத்தார் டிராப்பிக் ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் கடந்த வாரம் மஞ்சல் பெட்டிக்கடவை தொடர்பான பிரச்சாரத்தை மேற்கொண்டது. அந்த வரிசையில் இந்த வாரம் வாகனம் பாவிக்கும் போது மொபைல் போன்கள் பாவிப்பது தொடர்பான விழிப்புணர்வு களை ஏற்படுத்தியுள்ளது. 

அண்மைய புள்ளி விபரங்களின் படி கத்தாரில் இடம்பெறும் வாகன விபத்துக்களில் அதிகமானவை மொபைல் போன்களை பாவித்தபடி வாகனம் செலுத்தியமையால் நிகழ்ந்தவையாகும். ஆகவே இது போன்று வாகனம் ஒட்டுபவர்களுக்கு அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது. 

வாகனத்தை செலுத்தும் போது நீங்கள் பேசுகின்ற தொலைபேசி அழைப்பு உங்களது வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைத்து விடும் என்பதாக தெரிவித்துள்ளது. வாகன ஓட்டுநர்கள் போக்குவரத்து சட்டங்களை மதித்து வாகனங்களை செலுத்தும் போது தொலைபேசி பாவிப்பதை முற்றாக தவிர்த்துக் கொள்ளும் படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அன்பான கத்தார் வாழ் வெளிநாட்டு சொந்தங்களே.! உங்களை நம்பி உங்களது, மனைவி மற்றும் பிள்ளைகள், பெற்றோர்கள் உங்களுக்காக காத்திருக்கின்றார்கள். நீங்கள் இங்கு வந்தது பணம் சம்பாதித்து செல்வதற்காகத் தான். பிணமாக செல்வதற்கு அல்ல. தகவலுக்காக எடுத்துக் கொள்ளாமல், தலைக்கு எடுத்து பின்பற்றி நடவுங்கள். 







Author: verified_user

0 comments: