Wednesday, 18 July 2018

சவுதியில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது..

சவுதி அரேபியாவில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் , கொலை ஆகிய குற்றங்களில் தொடர்புடைய 7 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 
மரண தண்டனை நிறைவேற்றுவதில் முதல் மூன்று இடங்களுக்குள் சவுதி அரேபியா காணப்படுவதாக எம்னெஷ்டி இண்டர்னெஷனல் தகவல் வெளியிட்டுள்ளது.
முதல் இரு இடங்களில் சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த வருடத்தில் கடந்த 6 மாதங்களில் மொத்தமாக 73 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: