Thursday, 12 July 2018

அமீரகத்தில் உச்சத்தை தொட்டது வெப்பம் ~ 51.5° C பதிவு!

அமீரகத்தில் தற்போது கடும் கோடைகாலம் நிலவி வருகிறது, நடப்பு ஆண்டில் இதுவரை பதிவான வெப்ப அளவில் உச்சபட்ச வெப்பமாக அபுதாபி எமிரேட், லிவா பிரதேசத்தின் மெஸைரா என்ற இடத்தில் 51.5 டிகிரி செல்ஷியஸ் என்று நேற்றைய (புதன்) வெப்பம் பதிவாகியுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக கூடுதல் வெப்பம் பதிவான இடங்கள்,
ஷைஹ் அல் ஸாலம் - 51.4 டிகிரி செலஷியஸ்
அல் ஷவாமெக் - 50.5 டிகிரி செல்ஷியஸ்
சுவைஹான் - 50.3 டிகிரி செல்ஷியஸ்
அல் அஜ்பான் - 50.1 டிகிரி செல்ஷியஸ்

தொடர்ந்து வரும் நாட்களில் அமீரக வெப்ப நிலை கடற்கரை பிரதேசங்களில் 46 முதல் 49 டிகிரி செல்ஷியஸ் வரையும் நிலவும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை ஈரப்பதம் (வெக்கை) 80 சதவிகிதமாக அதிகரித்து காணப்படும். எதிர்வரும் வெள்ளிக்கிழமை இரவும் சனிக்கிழமை காலையிலும் ஈரப்பதம் மிகவும் அதிகரிப்பதுடன் பனிமூட்டமாகவும் காணப்படும் என அமீரக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: