Monday, 16 July 2018

2022 கால்ப்பந்து உலக கிண்ணத்தை நடாத்தக் கத்தாருக்கு கிடைத்தமை அரபுலகுக்கான பெருமை! - அதிபர் தமீம்

2018ம் ஆண்டுக்கான 21வது உலகக் கிண்ணம் பிரான்ஸ் நாட்டின் வெற்றியுடன் நேற்றைய (15.07.2018) திகதியும் முடிவடைந்துள்ள நிலையில் 2022ம் ஆண்டுக்கான கால்ப்பந்து உலகக் கிண்ணம் 2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து வித முன்னேற்பாடுகளிலும் கத்தார் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. நேற்றைய தினம் கத்தார் அதிபர் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டினிடமிருந்து உலகக் கிண்ணப் பந்தைப் பெற்றுக்கொள்ளும் வேளையில் உரையாற்றினார். இதில் 2022ம் ஆண்டு காலப்பந்து உலகக் கிண்ணத்தை நடாத்தும் சந்தர்ப்பம் கத்தாருக்கு கிடைத்தமை முழு அரபு உலகுக்கும் கிடைத்துள்ள பெருமை என்பதாக கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் முழு அரபு உலகமும் இந்தப் போட்டிகளை சிறந்த முறையில் நடாத்தி முடிக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

மேலும் வெற்றிகரமாக 2018ம் ஆண்டு 21 உலக கால்ப்பந்த உலகக் கிண்ணத்தை நடாத்திய ரஷ்யாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு 2022ம் ஆண்டுக்கான மானசீகமான உதவிகளை ரஷ்யாவிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். அத்தோடு 2022ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை நடாத்த சந்தப்பர்த்தை வழங்கிய பிபா தலைவர் கியான்னோவுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார். 

Author: verified_user

0 comments: