Friday, 13 July 2018

2022 கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான ப்ரோமோசனை ரஷ்யாவில் ஆரம்பித்தது கத்தார்!

தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21வது பிபா கால்பந்து உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு 22வது கால்ப்பந்து உலகக் கிண்ணம் கத்தார் நடைபெற உள்ளமை அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் கத்தார் 2022ம் ஆண்டு நடைபெற உள்ள கால்ப்பந்து உலகக் கிண்ணத்துக்கான ப்ரோமாசனை தற்போதே கத்தார் ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் ஆரம்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதற்காக விசேட கூடாரங்கள் (Qatar Majlis)  அமைத்து பார்வையாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதோடு 25000க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை வந்து சென்றுள்ளதாக சுப்ரீம் கவ்ன்சில் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் விஷேட வீடியோக் காணொளிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெற உள்ள கால்பந்து கிண்ணம் தொடர்பான் முழு விபரங்களை ரசிகர்களுக்கு வழங்கவே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரான்ஸ் மற்றும் குரோஷியா நாடுகளுக்கிடையில் 15ம் திகதி நடைபெறும் இறுதி்ப் போட்டி வரை ரசிகர்களுக்கு இந்த ப்ரோமோசன் காட்டப்படும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கத்தாரில் #SeeYouin2022 என்ற ஹேஷ் டெக்கில் பதிவுகளும் வீடியோக்களும் பகிரப்பட்டு வருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

Author: verified_user

0 comments: