உலகில் முதல் தர விமானச் சேவை நிறுவனமான கத்தார் எயார்வெய்ஸ் தற்போது கத்தாரிலிருந்து 164 இடங்களுக்கு பயணிப்பதாகவும், 2022ம் ஆண்டளவில் 220 இடங்களுக்கு பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கத்தார் எயார்வெய்ஸ் உயர் அதிகாரி அக்பர் அல் பாகர் தெரிவித்துள்ளார்.
நேற்று (09.07.2018) அன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜுன் மாதம் 5ம் திகதி கத்தார் - சவூதிக் கூட்டணி நாடுகளுக்குகிடையில் இடம்பெற்ற முறுகலைத் தொடர்ந்து கத்தார் எயார்வெய்ஸ் சவூதி, பஹ்ரைன், அமீரகம், மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் வான்பரப்புக்கு மேலால் பறக்க தடைவிதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கத்தார் எயார்வெய்ஸ் பலத்த நஷ்டத்தை சந்திக்கும் என்பதாக கருதப்பட்டது.
என்றாலும் 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளை விட இந்த வருடம் மார்ச் மாதம் வரையான புள்ளி விபரங்களின் படி 10 சதவீத அதிகரிப்பை காட்டுகின்றன. அதன் காரணமாக தற்போது 164 இடங்களுக்கு பறக்கும் கத்தார் எயார்வெய்ஸ் ஐ படிப்படியாக மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கத்தார் எயார்வெய்ஸ் உயர் அதிகாரி அக்பர் அல் பாகர் தெரிவித்துள்ளார்.. இதன்படி 2022ம் ஆண்டளவில் கத்தார் எயார்வெய்ஸ் 220 இடங்களுக்கு பறக்கும் என்பதாக கத்தார் செய்திகள் தெரிவிக்கின்றன.