Monday, 11 June 2018

கத்தாரில் நோன்புப் பெருநாள் விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டன!

எதிர்வரும் நோன்புப் பெருநாளைக்கான விடுமுறை தினங்கள் பற்றி உத்தியோக பூர்வ அறிவிப்பை கத்தார் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் நாளை மறுதினம் 13ம் திகதி முதல் 23ம் திகதி வரை (10 நாட்கள்) அமைச்சகங்கள், அரச நிறுவனங்கள் விடுமுறைக்காக மூடப்பட்டிருக்கும். ஜுன் 24ம் திகதி முதல் அரச ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்புவார்கள் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேலை கத்தார் மத்திய வங்கியின் கீழ் இயங்கும் வங்கிகள், மற்றும் நிதி நிறுவனங்களுக்கான விடுமுறை தினங்கள் பற்றிய தீர்மானத்தை மத்திய வங்கியே தீர்மானிக்கும் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களைப் பொறுத்த வரை 3 நாட்கள் மட்டுமே விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். என்றாலும் வெள்ளிக்கிழமை பெருநாளாக இருந்தால் சில தனியார் நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை அல்லாத 3 நாட்கள் வழங்கப்படும் சாத்தியம் கத்தாரில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: