Thursday, 14 June 2018

கத்தாரில் பெருநாளைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - உள்துறை அமைச்சு தெரிவிப்பு!

எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, அனைத்து மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தார் பிரஜைகள், சுற்றுலாப் பயணிகள், தொழிலாளர்கள் போன்றவர்களின் பாதுகாப்பான சாலை வழிப் போக்குவரத்திற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் திறம்பட முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

குறிப்பாக பாதைப் பாதுகாப்பு, கடல் பாதுகாப்பு, போலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைள், போன்றவை திறம்பட செயற்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்து திணைக்களம் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நோன்புப் பெருநாள் வாழ்த்துக் அட்டைகளையும் விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.



Author: verified_user

0 comments: