Monday, 11 June 2018

வெளிநாட்டிலிருந்து வந்த மூன்று பெண்கள் கொழும்பில் கைது!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து 3 வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செல்லுபடியான விசா இன்றி தங்கியிருந்த 3 பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபரான பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பெண்களும் 35 வயதுடைய சீன நாட்டவர்களாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Author: verified_user

0 comments: