Wednesday, 13 June 2018

கத்தாரில் அனல் பறக்கும் வெயில்! தொழிலாளர்களுக்கு கட்டாய பகல் நேர ஓய்வுநேரம் ஜுன் 15ம் திகதி முதல்!

கத்தாரில் தற்போது கடும் சூடு நிலவி வரும் நிலையில் எதிர்வரும் 15ம் திகதி முதல் ஆகஸ்ட் 31ம் திகதி வரை (Open Workplaces)** திறந்த வெளிப் பணியாளர்களுக்கான கட்டாய ஓய்வு நேரம் கத்தார் நிர்வாக அபிவிருத்தி, தொழில் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் படி நன்பகல் 11:30 மணி முதல் மாலை 3:00 வரை திறந்த வெளியில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணிக்கு அமா்த்தப்படக் கூடாது என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி நிறுவனங்கள், பணிபுரியும் மணித்தியாலங்களை இரண்டு ஷிப்ட்களாகப் பிரித்து காலை ஷிப்ட்டுக்கு 5 மணித்தியாலங்களையும், ஏனைய மணித்தியாலங்களை 3 மணிக்குப்பிறகும் அமைத்துக் கொள்ளும் படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளைப் பின்பற்றாக நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பு - open workplaces  என்பது பாதை நிர்மானம், பாலங்கள் கட்டுமானம் போன்ற திறந்த வெளியில் பணிபுரியும் தொழிலாளர்களைக் குறிக்கும்.

Author: verified_user

0 comments: