Friday, 11 May 2018

அமீரகத்தில் இலவச அனுமதியுடன் மிக விரைவில் குர்ஆன் பூங்கா!

அமீரகத்தில் எத்தனையோ வகையான கேளிக்கை பூங்காக்கள் உள்ளன என்றாலும் முதன் முதலாக ஆன்மாவிற்கு அமைதி தரும், மனித குலத்திற்கு மிகவும் பிரயோஜனமான பூங்கா ஒன்று துபை அல் கவானிஜ் பகுதியில் மிக மிக விரைவில் திறக்கப்படவுள்ளது. சுமார் 60 ஹெக்டேர் பரப்பளவில் உருவாகியுள்ள இந்த அற்புதப்பூங்காவை வழங்கியதற்காக துபை அரசை வாழ்த்துகிறோம்.

ஒரு திறந்தவெளி பூங்காவாக (Open Garden) வடிவமைக்கப்பட்டுள்ள குர்ஆன் பூங்காவிற்குள் செல்ல நுழைவு கட்டணம் இல்லை என்றாலும் 'அற்புதங்களின் குகை' (Cave of Miracles) என்ற பெயரில் அமைந்துள்ள பகுதிக்கும், கண்ணாடி மாளிகைக்குள் (Glass House) அமைந்துள்ள தாவரவியல் பூங்காவிற்குள் செல்வதற்கு மட்டும் தலா 10 திர்ஹங்கள் நுழைவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவ்விரு இடங்களை தவிர்த்த குர்ஆன் பூங்காவின் ஏனைய பகுதிகளுக்கு செல்வதற்கு அனுமதி முற்றிலும் இலவசம்.

அற்புதங்களின் குகையின் (Cave of Miracles) சிறப்புக்கள்:
அல் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள பலவகையான அற்புத சம்பவங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 7 அற்புத சம்பவங்களை (7 Miracles) இன்றைய நவீன தொழிற்நுட்பத்தின் உதவியுடன் மீண்டும்காட்சிகளாக நடத்திக்காட்டி பார்வையாளர்களுக்கு விளக்கம் தரப்படும்.

The Cave of Miracles showcases seven miracles mentioned in the Quran displayed with the latest modern interactive techniques.

கண்ணாடி மாளிகையினுள் அமைந்துள்ள தாவரவியல் பூங்காவின் சிறப்புக்கள்: 
அல் குர்ஆனிலும், ஹதீஸிலும் கூறப்பட்டுள்ள தாவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு அதனதன் தட்பவெப்ப சூழலை உள்ளுக்குள்ளேயே உருவாக்கி கண்ணாடி மாளிகைக்குள் வளர்க்கப்படுகின்றன.

the park will provide a wonderful opportunity to explain many of the miracles mentioned in the Quran, as well as the advantages of the plants mentioned in the Quran. It will also showcase how modern medicine relies heavily on them for treatment of various ailments and its benefits to the environment.

“Among the most important elements of the project is the Glass House containing the plants mentioned in the Quran and Sunnah, which grow under certain temperatures and special environmental determinants, as well as shops selling herbs and plants mentioned in the Quran,

அதுபோல் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள சில தாவரங்கள் எவ்வாறு இன்றைய நவீன மருத்துவத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் துணைபுரிகின்றன என்றும் விளக்கப்படும். மேலும் இயற்கை மூலிகை தாவரங்களையும் மருந்துக்களயும் விற்கும் கடை ஒன்று செயல்படும்.

அல் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள காய், கனிகளில் சிலவான வாழை வகைகள் (Bananas), மாதுளை வகைகள் (Pomegranates), முலாம்பழ வகைகள் (Melons), ஆலிவ் வகைகள் (Olives), திராட்சை வகைகள் (Grapes), அத்திப்பழ வகைகள் (Figs), பூண்டு (Garlic), முளைப்பூண்டு வகைகள் (Leeks), வெங்காய வகைகள் (Onions), சோளம் (Corn), பயறு வகைகள் (Lentils), கோதுமை (Wheat), துவரை வகைகள் (Pond beans), இஞ்சி (Ginger), புளி (Tamarind), துளசி (Basil), பூசணி வகைகள் (Pumpkins) மற்றும் வெள்ளரி வகைகள் (Cucumbers) போன்ற பல தவாரங்கள் அடங்கிய 12 வகையான தோட்டங்களும் இங்கு உள்ளதுடன் அதன் மருத்துவ மற்றும் அறிவியல் பயன்பாடுகள் பற்றியும் விளக்கப்படும்.

இந்தப் பூங்காவைச் சுற்றி மின்சாரத் தேவைகளுக்காக சோலார் மின் தகடுகள், வைபை வசதிகள், மொபைல் ரீசார்ஜ் வசதிகளுடன் நிழல் தடுப்புகளுடன் கூடிய ஓய்வு இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் இங்குள்ள தானியங்கி இயந்திரங்களில் (Kiosk) இந்த பூங்காவை பற்றிய விபரங்கள், தாவரங்கள் அமைந்துள்ள இடங்கள், அதன் மருத்துவப் பயன்பாடுகள் அத்துடன் அத்தாவரம் சம்பந்தமாக வந்துள்ள குர்ஆன் வசனங்களும் வெளிப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இன்றைய நவீன கலாச்சார உலகிற்கு இஸ்லாம் மற்றும் அதன் கலாச்சார மேன்மைகளையும்;, இஸ்லாத்தின் ஜீவநாதமாக விளங்கும் சமத்துவம், சமாதானம், சகிப்புத்தன்மை, அன்பு மற்றும் அமைதியையும் எடுத்தியம்புவதே இந்த அல் குர்ஆன் பூங்கா அமைக்கப்பட்டதன் நோக்கம் என துபை மாநகராட்சியின் பொது இயக்குனர் தாவூது அப்துல் ரஹ்மான் அல் ஹாஜிரி அவர்கள் தெரிவித்தார்கள்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: