Tuesday, 22 May 2018

கத்தாரில் உள்ள சூபர்மார்க்கட்களுக்கு பொருளாதார அமைச்சு விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

கத்தாரில் அமைந்துள்ள மோல்கள், சூபர்மார்க்கட்டுக்கள், வியாபார நிறுவனங்கள் தங்களது வியாபார நேரங்களை 24 மணித்தியாலங்களாக ஆக்கிக் கொள்ள முடியும் என்பதாக பொருளாதாரம் மற்றும் வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது. புனித ரமழான் மாதத்திற்காகவே இந்த விசேட சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முன் அனுமதியை பெறத் தேவையில்லை என்பதாகவும் பொருளாதாரம் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் விசேட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னர் சேவை நேரங்கள் பற்றிய முன் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும். புனித ரமழான் மாதத்துக்காக வேண்டியே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மோல்கள், சூபர்மார்க்கட்டுக்கள், வியாபார நிறுவனங்கள் தங்களது சேவை நேரங்கள் பற்றிய அறிவித்தலை வாடிக்கையாளர்களுக்கு  வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Author: verified_user

0 comments: