Monday, 14 May 2018

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய வசதிகள் அறிமுகம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பல புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக விமான போதுக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

விமான நிலைய பகுதியை மறைக்கும் வகையில் வைபை இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்து கொள்ளும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முழுமையாக விமான நிலையத்திற்கு வைபை வசதிகளை வழங்குவதற்கு எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நவீன முறை ஓடு பாதை சீர்திருத்தம் செய்யப்படும். தற்போதுள்ள ஓடு பதையின் இரண்டு பக்கங்களிலும் மேலும் 15 மீற்றர் நீளம் அதிகரிக்கப்படவுள்ளது.

விமான நிலையத்திற்கு வரும் மற்றும் வெளிச் செல்லும் பயணிகளை அனுப்ப வரும், நபர்களினால் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Author: verified_user

0 comments: