Wednesday, 16 May 2018

கத்தாருக்கு குடும்ப உறவுகளை அழைத்து வர இருப்பவர்களுக்கான மிகவும் மகிழ்ச்சியான செய்தி!

கத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் இதுவரை காலமும் தங்களது உறவுகளை இங்கு அழைத்து வர அரசாங்கத்தால் வேண்டப்படுகின்ற படிவங்கள் அனைத்தையும் நிரப்பி கத்தார் கடவுச்சீட்டு மற்றும் வெளிநாட்டு அலுவல்களுக்கான திணைக்களத்துக்கு நேரடியாக சென்று விண்ணப்பிடிக்க வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இன்று முதல் அந்த நடைமுறை மாற்றப்பட்டு விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க முடியும் என்பதாக கத்தார் அரசாங்கம் அறிவித்துள்ளது.

உண்மையில் கத்தார் வாழ் வெளிநாட்டவர்களைப் பொறுத்த வரையைில் மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும். தனியார் நிறுவனங்கள் விடுமுறைகளை வழங்க ஒரு போதும் விரும்புவதில்லை. ஆகவே தங்களது குடும்பத்தை, உறவுகளை கத்தாருக்கு அழைத்து வர விரும்புபவர்கள், பணிபுரியும் இடத்திலிருந்து தேவையான படிவங்களைப் பூர்த்தி செய்து ஆன்லைன் மூலமாக அல்லது மெட்ராஸ் அப்ளிகேசன் மூலமாக விண்ணப்ப முடியும். ஏதாவது படிவங்கள் பற்றாக்குறையாக இருக்கும் பட்சத்தில் அவை "ALERT" மூலமாக அறிவிக்கப்படும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பை கத்தார் உள்துறை அமைச்சு வெளியிட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: