Monday, 14 May 2018

சவூதி அரேபியாவின் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல்கள்! ஜேர்மன் கம்பனிக்கு சவுதி கடும் கண்டனம்!

சவூதி அரேபியாவின் தேசியக் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல் உற்பத்திகளை மேற்கொண்ட ஜேர்மனின கம்பனி ஒன்றால் கடும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.  சவூதி அரேபியாவின் தேசியக் கொண்டி உலக முஸ்லிம்களால் பின்பற்றப்படுகின்ற இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கைப் பிரகடனத்தை கொண்டது. 

இந்த கொள்கை அடங்கிய கொடியை  இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட மதுபான உற்பத்திகளுக்கு பயன்படுத்தியமை முஸ்லிம்களை கொந்தளிக்க வைத்துள்ளது. தற்போது இந்த செய்திகள் இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வருகின்ற வேலையில் ஜேர்மனியில் உள்ள சவூதி அரேபியாவின் தூதரகம் கடும்  கண்டனத்தை வெளியிட்டுள்ளது. 

இதன் பின்னர் ஜேர்மனியின் Mannheim நகரில் அமைந்துள்ள“Eichbaum”  என்ற நிறுவனம்  தனது சமூக வலைதளம் ஊடாக மண்ணிப்பு கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

Author: verified_user

0 comments: