Tuesday, 15 May 2018

கத்தாரில் தனியார் நிறுவனங்களுக்கான ரமழான் மாத பணி நேரம் 6 மணித்தியாலங்கள் மட்டுமே!

நிர்வாக அபிவிருத்தி, தொழில் மற்றும் சமூக விவகார அமைச்சு விடுத்துள்ள செய்தியின் படி கத்தாரில் தனியார் நிறுவனங்கள் புனித ரமழான் மாதத்தில் 6 மணத்தியாலங்கள் மட்டுமே ஊழியர்களை பணிக்கு அமர்த்த முடியும் என்பதாக அறிவித்துள்ளது. ஆனால் இந்த 6 மணி நேரங்களை தனியார் நிறுவனங்களே வரையறுத்துக் கொள்ள வேண்டும் என்பது பொதுவான விடயமாகும்.

மேலும் நிர்வாக அபிவிருத்தி, தொழில் மற்றும் சமூக விவகார அமைச்சு விடுத்துள்ள செய்தியின் படி பல நிறுவனங்களின் ஊழியர்களிடமிருந்து முறைப்பாடுகள் கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்றுள்ளன.  இந்த முறைப்பாடுகள், ஈ-மெயில், அமைச்சகத்தில் சமூக வலைதளங்கள் மூலமாக செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: