Monday, 21 May 2018

கத்தாரில் வீசா விற்பனையில் ஈடுபட்டு வந்த 40 வெளிநாட்டவர்கள் அதிரடிக் கைது!

கத்தாரின் 2015ம் ஆண்டின் 21ம் இலக்க, வெளிநாட்டவர்கள் உள்வருகை மற்றும் வெளியேறுதல் தொடர்பான சட்டங்களுக்கு புறம்பாக வீசா மோசடிகளில் ஈடுபட்ட 40 வெளிநாட்டவர்களை கைது செய்துள்ளதாக உள்துறை அமைச்சு விடுத்துள்ள உத்தியோக பூர்வ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வீசா வர்த்தகத்தில் ஈடுபட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, இவர்கள் தகுந்த சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதாகவும், இது போன்ற சட்ட விரோத வீசா மோசடிகளில் ஈடுபடும் தனிநபர்கள், நிறுவனங்களுக்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க கத்தார் தயங்காது என்பதாக மேற்படி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது போன்ற வீசா மோசடி சம்பவம்கள் உங்களுக்கு ஏற்பட்டால் உடனே 50701089 என்ற இலக்கத்துக்கு அழைத்து முறைப்பாடகளை பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு முறைப்பாடுகளை ஆங்கிலம், அரபு மற்றும் உறுது மொழிகளில் பதிவு செய்ய முடியும்.

Author: verified_user

0 comments: