Wednesday, 4 April 2018

விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட பிரமிக்க வைக்கும் கத்தாரின் படம் - PEARL QATAR

மனிதர்களால் உருவாக்கப்பட்டு வரும் பேர்ல்(Pearl) கட்டாரின் வரைபடத்தை சர்வதேச விண்வெளி ஆய்வுக் கூடம் வெளியிட்டுள்ளது. விண்வெளி பார்வையில் இந்த புகைப்படம் பார்ப்பதற்கு பைனாகுலர் போன்ற தோற்றத்தை அளிக்கிறது.

சர்வதேச விண்வெளி ஆய்வுக் கூடத்தின் விண்வெளியாளர் ஒருவர் கட்டார் தலைநகர் தோஹாவின் வரைபடத்தை படம் பிடித்துள்ளார். அரேபிய வளைகுடாவில் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள பேர்ல் கட்டாரின் வரைபடமானது வியக்க வைப்பதாக இருக்கிறது.

மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேர்ல் கத்தார் தனித்தீவு 1.5 சதுர கிலோமீட்டர்(0.6 சதுர மைல்கள்) கொண்டது. கட்டார் குடிமகன்கள் அல்லாத வெளிநாட்டவர் இந்தத் தீவின் உரிமையாளர்களாக இருக்கின்றனர்.

இந்தத் தீவுகளை இரண்டு ஆழமான கால்வாய்கள் பிரிக்கின்றன. பேர்ல் கட்டாரின் உள்கட்டமைப்பு இரண்டு முத்து மணிகளை கோர்த்தது போல அமைக்கப்பட்டிருக்கும். இந்த செயற்கை தீவை கட்டமைக்கும் பணிகள் 2014ம் ஆண்டில் ஆரம்பிக்க பட்டது மேலும் இது , 2018ல் முடிவடையும் எனதிட்டமிடப்பட்டுள்ளது. (தமிழ் செய்திகள் - கத்தார்)


Author: verified_user

0 comments: