Tuesday, 10 April 2018

பிரபலமான சில உலக நாடுகளில் கடைபிடிக்கப்படும் விசித்திரமான சட்டங்கள்!

பொது இடங்களில் ,புகை பிடிப்பது மதுபானம் அருந்துவது என சவூதியில் சட்ட திட்டங்கள் அதிகம் இருந்த போதிலும் அரபு நாடுகளில் இது பொதுவான ஒன்றே, ஆனால் பல உலக நாடுகளில் சில விசித்திரமான சட்ட திட்டங்கள் கடை பிடிக்க படுகின்றது அப்படி பட்ட சில சட்டங்களை இங்கு பார்ப்போம்

ஜப்பான்

லேசாக மழை விழுந்தால் நம்மவூர் சாலைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கும். காரில் பயணிப்பவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை தண்ணீரை வாரி இறைத்துக் கொண்டு போவார்கள். ஆனால் ஜப்பானில் இது சாத்தியமல்ல. ஏன் தெரியுமா? சாலையில் நடந்து சென்று கொண்டிருப்பவர்கள் மீது வண்டியில் செல்வோர் தண்ணீரை வாரி இறைத்தால் அது சட்டப்படி குற்றம்

சீனா :

சீனாவில் நடந்து செல்பவர்களை சற்று மரியாதைக் குறைவாகத்தான் பார்க்கிறார்கள். பாதசாரிகளுக்காக வண்டியை நிறுத்தக் கூடாது. சீனாவில் சாலையை கடப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல அதனாலேயே பெரும்பாலும் கூட்டம் சேருகிற வரை காத்திருந்து குறைந்தது பத்து பேர் வரையாவது சேர்ந்த பின்னர் தான் சாலையை கடப்பார்களாம்.

தென்னாப்பிரிகா :

தென்னாப்பிரிகாவில் மனிதர்களுக்கு கொடுக்கிற அதே மரியாதையை விலங்குகளுக்கும் கொடுக்கிறார்கள். சாலையில் செல்லும் போது மனிதர்களை விட விலங்குகள் ஏதேனும் சாலையில் செல்கிறதா என்பதையும் கவனித்துக் கொண்டே செல்ல வேண்டும். விலங்குகள் அடிக்கடி வரும் வழியென்றால் மெதுவாகத்தன செல்ல வேண்டும். மாறாக சாலையில் தான் எந்த விலங்கும் இல்லையே என்று வேகமாகச் சென்றாலும் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

டென்மார்க் :

டென்மார்கில் நீங்கள் காரை கிளப்புவதற்கு முன்னால் குனிந்து வீல்களை பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அதை ஒரு பழக்கமகவே தொடர்ந்து பின்பற்றுகிறார்கள். கார் எடுப்பதற்கு முன்னால் சக்கரத்துக்கு அடியில் விலங்குகளோ அல்லது குழந்தைகளோ சிக்கியிருக்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும் என்பது அங்கே கட்டாயமாக்கப்பட்ட ஓர் விதியாம்

ரஷ்யா :

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இந்த சட்டம் இருக்கிறது அதாவது உங்களுடைய கார் சுத்தமாக இருக்க வேண்டும். கார் சுத்தமாக இல்லையென்றாலும் அதிகாரி உங்களிடம் அபராதம் விதிப்பார். காரின் சுத்தத்திற்கு எந்த வரையறையும் இல்லை என்பதால் பயணிப்பவர்களின் கதி திண்டாட்டம் தான். (தமிழ் செய்திகள்)

Author: verified_user

0 comments: