Sunday, 15 April 2018

கொழும்பை அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

உடவளவை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று -15- திறக்கப்படவுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது. உடவளவை நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ள காரணத்தினால் 5 வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன.

இதனால் குறித்த பகுதியில் தாழ்நில பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் வளவை ஆற்றை உபயோகிப்போரும் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Author: verified_user

0 comments: