Monday, 16 April 2018

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பெயரில் சமூக இணையதளங்களில் பரவும் பொய் குறித்து விமான நிறுவனம் எச்சரிக்கை!

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் பெயரால் சமூக இணையதளங்களில் பரவும் பொய் குறித்து விமான நிறுவனம் எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் 32வது துவக்கத்தை முன்னிட்டு 500 அதிர்ஷ்டகார வாடிக்கையாளர்களுக்கு 2 இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படுவதாக பேஸ்புக், வாட்ஸப், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் ஒரு பொய்ச்செய்தி மிக வைரலாக பரவி வருகிறது. இந்த செய்தி முற்றிலும் பொய் என மறுத்துள்ளது எமிரேட்ஸ் விமான நிறுவனம்.

நீங்கள் இந்த பொய்ச் செய்தியை நம்பி உங்களுடைய தகவல்களை இந்த போலி விளம்பரதாரர்களிடம் பகிர்ந்தால் உங்களுடைய அந்தரங்க தகவல்கள் பல களவாடப்பட வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

தங்களுடைய அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் அனைத்தும் தங்களுடைய அதிகாரபூர்வ இணையதளங்களில் மட்டுமே நீள நிற குறியுடன் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது. “Genuine competitions are only hosted on our official social media accounts, marked with a blue tick.”

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: