Saturday, 14 April 2018

நுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)

இம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளபட்ட இனவாத வன்முறைகளை அடுத்து, விடுமுறைக்கு செலவு செய்யும் பணத்தை பாதிக்கபட்ட முஸ்லிம்களுக்கு வழங்குமாறும் அல்லது ஏனைய பகுதிகளில் விடுமுறையை கழிக்குமாறும் முஸ்லிம் சமூக ஆர்வலர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் முஸ்லிம்கள் இம்முறை பெருமளவில் நுவரெலியா செல்வதை தவிர்த்திருப்பதால், அங்குள்ள ஹோட்டல்கள், விடுதிகள் வெறிச்சோடியிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.


Author: verified_user

0 comments: