Saturday, 7 April 2018

தனது நாட்டு இளைஞர்களை ஊக்குவிக்க கத்தார அரசு எடுத்துள்ள புதிய நடவடிக்கை!

2018 ம் ஆண்டிற்கான கட்டார் இளைஞர் மையங்கள் பேரவை கட்டார் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் 26 இளைஞர் மையங்கள் பங்கேற்றன.

இந்நிகழ்வில் கலாசார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கலாநிதி ஸலாஹ் பின் கனேம் பின் நாசர் அல் அலி (Salah bin Ghanem bin Nasser al-Ali) மற்றும் கட்டார் பல்கலைக்கழக தலைவர் டாக்டர் ஹஸன் அல்-டெர்ஹம் (Dr Hassan al-Derham) ஆகியோர் இந்நிகழ்வில் பிரமுகர்களாக கலந்துக் கொண்டனர்.

மூன்று நாள் நடைபெறும் இம் மன்றமானது கலாசார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் கட்டார் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கூட்டுத்தன்மையை வலுப்படுத்துவதோடு இளைஞர் மையங்களின் நடவடிக்கைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவற்றை ஒருங்கிணைப்பதற்கும் வழியமைக்கிறது.

மேலும் இளைஞர் மையங்களின் முக்கியத்துவம் மற்றும் சமுதாயத்தை அபிவிருத்தி செய்வதற்கான முக்கியத்துவம் பற்றி இளம் மாணவ சமுதாயங்களுக்கிடையே விழிப்புணர்வை வளர்த்தெடுப்பதில் அவர்களின் பங்களிப்பு குறித்தும் போதிக்கும் ஒரு நிகழ்வாக அமைகிறது.(கத்தார் தமிழ் செய்திகள்)

Author: verified_user

0 comments: