Wednesday, 4 April 2018

ஐபோன் பாவனையளார்களுக்கான மகிழ்ச்சியான செய்தி! BATTERY பாவனையை அதிகப்படும் அப்டேட்!

சமீப காலமாகவே ஆப்பிள் மொபைல்களில் சில பிரச்சினைகள் இருப்பதாக பாவனையாளர்கள் தெரிவித்து வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்ற ஒரு முடிவை ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது.

குறிப்பாக ஆப்பிள் பயன்பாட்டாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த iOS 11.3 மென்பொருள் வெளியிடப்பட்டுள்ளது.பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு வெளியிடப்பட்டிருக்கும் இந்த மென்பொருளினால் iPhone ஐ மேம்படுத்துவதன் மூலம், பேட்டரி சார்ஜ் அதிக நேரம் தாக்குப் பிடிப்பதோடு iPhone பயன்பாட்டாளர்களின் சுய விவரங்கள் கண்காணிக்கப்படுவதையும் இந்த மென்பொருள் காண்பிக்கும்.

அவசர கால உதவியை நாடும்போது பாதிக்கப்பட்டவர் இருக்கும் இடத்தை தாமாகவே அனுப்பக்கூடிய AML என்ற செயலியும் உள்ளது. இதில் உள்ள ARKit 1.5, augmented reality எனும் இயந்திர உரையாடலையும் கொண்டுள்ளது.

Author: verified_user

0 comments: